Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில்  சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த  விபத்தால்  அந்த  பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |