தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரை மீது தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதால் அதன் பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.