பிரதமர் மோடி தலைமை அலுவலகத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒரு அரசியல் கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்த வகை சூழ்நிலை நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில் ஒரு முதிர்ச்சி அடைந்த ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்சிக்கு எல்லைக்கு அப்பால் மக்கள் உழைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசுகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.