மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு காண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி.செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
செப்டம்பர் 21-ம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. செப்டம்பர் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது. மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர பிற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது.மத்திய அரசிடம் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.