மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள்.
கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் காசி மாரியப்பன் உள்ளிட்டோரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.