டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியத்தால் ரோகித், மகாலட்சுமி என்ற இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கொடிய டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியத்தால் ரோகித், மகாலட்சுமி என்ற இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!#Dengue வைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/AT0rEFiCyO
— M.K.Stalin (@mkstalin) September 24, 2019