Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஊரடங்கை நீட்டிக்க மாநிலங்கள் கோரிக்கை – பிரதமர் மோடி

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக முக்கியமான பணியாக வைத்திருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். அதேபோல நேர்மறையாக அரசியலை கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனாவை சமாளிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

வெற்றியடைந்த அடுத்த நொடியே ...

தற்போது சமூக அவசர நிலையை நாம் கட்டாயம் கடந்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும், அவ்வாறு நீட்டித்தால் மட்டும் தான் கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர்களும் நிறைய கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் சேர்த்து சரியான ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கின்றார்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக ...

இதில் ஒரு மிக முக்கியமானதாக பார்க்கவேண்டியது ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தற்போதும் பெரும்பாலான மாநிலங்கள்  ஊரடங்கு நீடிப்பை விரும்புவதாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த கூடிய நிலையில் இந்த கருத்து வலுப்பெற்றுள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |