Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான கியூப் போட்டி: சென்னை மாணவர் முதல் பரிசு!

மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார்.

கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவர் நிதன் நாதன் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவரைத்தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மாணவர் சுஜய் சக்திவேல் இரண்டாம் பரிசையும், சென்னையைச் சேர்ந்த சரவணன், கவுதமன் ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவளுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

Categories

Tech |