Categories
உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை.. அமைச்சர் ஜெய்சங்கர் திறப்பு..!!

கிரீஸ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிரீஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். நேற்று, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான நிகோஸ் டெண்டியாஸிடம் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து இரண்டு நாடுகளின் உறவுகளையும் முன்னேற்றுவது தொடர்பில் பேசினர். இரு நாடுகளின் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்பு கிரீஸின் தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி சிலையை இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். இது தொடர்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளதாவது, “உலகம் முழுக்க மகாத்மா காந்தியின் போதனைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |