குஜராத்தில் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலையை ஓ.எல்.எக்ஸ்-ல் விற்பனைக்கு வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளுக்கான அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட நர்மதா மாவட்டம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை ரூ .30,000 கோடிக்கு “விற்க” ஓ.எல்.எக்ஸ்-ல் விளம்பரம் செத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்.
அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில், “ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை சரிபார்ப்பு இல்லாமல் உள்ளூர் அலுவலகம் அதனை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நாங்கள் போலீஸ் புகார் அளித்துள்ளோம்”.
அந்த நபர் விரைவில் அகப்படுவார் என கூறினார். 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட சர்தார் படேலின் நினைவுச்சின்னம் உலகின் மிக உயரமான சிலையாகும். இது 2018-ல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து பல லட்சம் மக்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.