கொல்கத்தா கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தின் போது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். இவர் சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்துள்ளார். இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக பெருமையுடன் போற்றி, மதித்து வருகின்றனர்.
இதற்கிடையே கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது பாஜக தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்ட்டு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பற்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் நடந்த கலவரத்தில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியுடன் தெரிவித்தார் .