Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டிலே இருங்க…..! ”உங்களை தேடி வரும்” நல்லா சாப்பிடுங்க – சுவையான அறிவிப்பு ….!!

தமிழக அரசு பொதுமக்களுக்கு மீன்கள் வீட்டிற்க்கே செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகல் மிகவும் அவசியம் என்பதால் அரசும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதோடு பல்வேறு விஷயங்களை மக்களுக்கு சென்றடையும் வகையில் மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றனது. தமிழக அரசும் கூட நடமாடும் விற்பனை கூடம் என்று ஏராளமான உத்தரவை பிறப்பித்ததை தொடர்ந்து தற்போது மீன்களை வீட்டிலிருந்தே பெற்று பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக மீன் வளத்துறை சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதில், மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.meengal.com என்ற இணையத்தில் தெரிவித்தல் போதும் என்று தெரிவித்ததோடு meengal என்ற செயலில் ஆர்டர் செய்தால் மீன் வீட்டிற்கு வரும். சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், விருகம்பாக்கம் பகுதியில் காலை 9 மணி முதல் பகல் 12.30மணி வரை பெறலாம். இந்த வசதியை சென்னை நகரத்தில் இதர பகுதிக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |