அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியில் இருக்க இன்னும் 70 நாட்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சரை நீக்கியுள்ளது அனைவரையும் புலம்ப வைத்துள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியுற்றார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை சீட்டுகளை ஜோ பைடன் பெற்று அதிபராக பதவியேற்க இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக வருகின்ற ஜனவரி மாதம் இவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். எங்களுடைய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இப்படியான சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பதிவு அமெரிக்க அரசியலில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 70 நாட்களே இருக்கின்ற நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மார்க் எஸ்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் இயக்குநராக உள்ள கிறிஸ்டோபர் மில்லர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப் மார்க் எஸ்பர் சேவைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.