10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார்.
கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பணியில் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் தனியார் பள்ளிகள் அளிக்கும் தேர்வு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.