கேரளாவில் மாநிலம் கொரோனா வைரஸை வேகமாக கட்டுப்படுத்தி வருவது இந்திய மக்களை திரும்பி பார்க்க வைக்கின்றது.
இந்தியா முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனனர். மத்திய அரசு கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனாலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் 12,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 1,508 பேர் குணம் அடைந்துள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இதில் கொரோனா பாதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் கேரளா அனைவரும் வியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். கேரளாவில் இருந்து சீனா சென்று மருத்துவம் படித்த 3 பேருக்கு கொரோனா உறுதியாகியதை தொடர்ந்து அம்மாநிலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதனால் கொரோனா பாதித்த 3 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டு வேகமாகப் பரவத் தொடங்கிய போதும் கொரோனா தாக்கத்தில் கேரளம் மாட்டிக்கொண்டது. தற்போது கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட மாநிலத்தில்மகராஷ்டிராவை மிஞ்சி கேரளா முதல்வரிசையில் இருந்தது. பின்னர் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகளை அதிகப்படுத்தி கொரோனா வைரஸ் தாக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியது.
அம்மாநில அரசு ஊரடங்கு காலத்தில் 20,000 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வகுத்து கொடுத்து. அனைவரும் ஊரடங்கை மீறாத வண்ணம் பாத்துக்கொண்டு கேரள அரசின் இந்த நடவடிக்கை உலகளவில் புகழப்பட்டன. மத்திய அரசு மிக குறைவான அளவே நிவாரணம் ஒதுக்கினாலும், இந்தியாவே எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு கொரோனா சோதனையை தீவிரப்படுத்தி, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி, கொரோனா இறப்பை குறைத்து அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு கேரளா மாநிலம் திகழ்கிறது.
கேரளாவில் 387 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 211 பேர் குணமடைந்துள்ளனர். 2 இறப்புகளை சந்தித்துள்ள கேரளா கொரோனா பாதிப்பை திறமையாக கையாண்டு வருகின்றது. அதன் விளைவாக நேற்று அம்மாநிலத்தில் ஒரே ஒருவருக்கு தான் கொரோனா தொற்று உறுதியாகியது.கடந்த 7 நாட்களில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல 7 நாட்களில் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டை எடுத்துகொண்டுமானால் கடந்த 7 நாட்களில் 504 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த நாடே கொரோனா நடவடிக்கைகளில் கேரள அரசின் மக்கள் நல போக்கை வியந்து பார்க்கின்றார்கள். இந்தியாவில் பல வைரஸ் தொற்றுக்களை கையாண்ட அணுகுமுறை இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அங்கே மக்களுக்காக ஆளும் கம்யூனிஸ்ட் அரசும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்சும் அமர்ந்து பேசுகின்றார்கள். ஆனால் தமிழநாட்டிலோ அல்ல பிற மாநிலங்களிலோ இது சாத்தியமற்ற ஒன்றாக தான் பார்க்கப்படுகின்றது.