கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
சிலர் முறைகேடாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்று வருகின்றனர். காவல்துறையினர் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பிடித்து வந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. கள்ளச்சாராயம் குடித்த பலரும் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சவதை இன்னும் நிறுத்தியபாடில்லை. இதனால் பஞ்சாப் அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது.
அதாவது கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அமிர்தசரஸ் குருதாஸ்பூர் ஆகியவடமாநில மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பறி போனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது சிறை அதோடு 20 லட்சம் அபராதமும் விதிக்க முடிவு செய்துள்ளது.