உடலுக்கு இரும்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன்பின் அதனை வேக வைத்து பின் வெல்லப்பாகை சேர்த்து பொங்கல் பதம் வந்தவுடன் 5 நிமிடம் மூடி வைத்துவிட வேண்டும்.
பின்னர் நெய்யில் முந்திரி, வறுத்த திராட்சை, பொடித்த ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அதனை வேக வைத்த பொங்கல் பதத்துடன் கலந்து சிறிது நேரத்திற்கு பின் தட்டில் எடுத்து வைத்தால், இரும்புசத்து நிறைந்த எளிதில் செரிமானம் ஆகக்கூடிய திணை இனிப்பு பொங்கல் தயார்.