Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடி மேல் அடி”….. இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. பீதியில் எடப்பாடி….. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில்  நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிய வருகிறது‌. சமீபத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசிய போது கூட அவருக்கு சாதகமாக எதுவுமே நடக்கவில்லை என்பது எடப்பாடியின் முகமே காட்டி கொடுத்தது.

இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரமானது எடப்பாடி பழனிச்சாமி தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. அதாவது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தான் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக எடப்பாடி கூறியுள்ள நிலையில், அவருக்கு ஒவ்வொரு நிமிடமும் தகவல்கள் போனதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனை கூட்டத்தின் போது மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக கட்சி பிளவுபட்டு கிடப்பதை யாரும் விரும்பவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது போன்று அதிமுகவின் சின்னமும் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதோடு கட்சியின் சின்னம் முடக்கப்பட்டு விட்டால் நம்மால் எதுவுமே தேர்தலில் செய்ய முடியாது எனவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே சட்டப்பேரவையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், முன்பு இருந்த இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவி தான் தற்போது வரை நீடிக்கிறது எனவும் சபாநாயகர் கூறினார். இப்படி சுற்றி சுற்றி பல்வேறு பிரச்சனைகள் நடப்பதால் எடப்பாடி பழனிச்சாமி பெரும் கவலையில் இருக்கிறாராம். மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சில முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |