Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்! 

நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து மீள திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என தகவல் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயம், சிறுகுறு தொழில் கடன் வழங்க சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும். ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியகம் கணிக்கப்பட்டுள்ளதாகவும், நபார்டு, சிட்பி, என்.ஹெச்.பி வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |