Categories
கல்வி கன்னியாகுமாரி மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் 60,000 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Image result for செங்கோட்டையன்

மேலும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலையை மாற்றி அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் சுமார் 60 ஆயிரம் மாணவர்களை சேர்க்க  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்த அவர், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வி திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |