புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” வெளிமாநில பொதுமக்கள் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் மே 3ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது என மத்திய
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்பு விகிதம் இப்போது 25.19% ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் அதிகபடச்சமாக மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிகவும்
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 37வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு இந்த ஊரடங் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு
மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை படிப்படியாக குறைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தற்போது புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.