Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகள்!

முடிந்தவரையில் எதை செய்தாலும் அதில் கணவரின்/மனைவியின் பங்கு இருக்கும் வகையில் செய்ய வேண்டும்.

பொதுவாக திருமணமான அனைவருக்கும் அவ்வபோது இந்த சந்தேகம் வரும். நம் கணவர்/மனைவி நம்மிடம் உண்மையிலேயே அக்கறையுடன் உள்ளார்களா? என்பது தான் அந்த சந்தேகம். இதைத் தெரிந்துகொள்வதற்காக பல சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நண்பர்களிடம் விசாரிப்பார்கள். இதுபோன்ற சூழலில், உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு நீங்கள் அக்கறையுடன் இருப்பதை காட்டும் வழிமுறைகளை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. உங்கள் துணை பேசும் போது கவனியுங்கள்:

ஆம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் பேசும் போது, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனித்து, அதற்கு நீங்களும் ஆர்வத்துடன் பேச வேண்டும். மாறாக ம்ம்ம்ம்..  என்று சொல்வதோடு நிறுத்தக்கூடாது. இவ்வாறு வெறுமனே பேசினால், நீங்கள் பேசுவதில் ஆர்வமில்லாமல்  இருப்பதாக உங்கள் வாழ்க்கைத் துணைவர் நினைக்கக்கூடும்.

2. ஏதாவது பிளான் செய்தால் உங்கள் துணைவரிடம் ஆலோசனை கேட்கவும்:

இந்த மாதத்திற்கான பட்ஜெட், ஷாப்பிங் எப்போது செல்ல வேண்டும், வீட்டில் புதிதாக என்ன வாங்கலாம் என உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் கலந்தாலோசியுங்கள். அப்போது தான் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும். மேலும், இவ்வாறு நீங்கள் செய்தால் தான் உங்கள் துணையை, உங்கள் வாழ்வின் அங்கமாக வைக்கிறீர்கள் என்பது அவர்களுக்குப் புரியும். சுருக்கமாகச் சொல்லப்போனால், முடிந்தவரையில் எதை செய்தாலும் அதில் கணவரின்/மனைவியின் பங்கு இருக்கும் வகையில் செய்ய வேண்டும்.

3. வீண் வாக்குவாதம் வேண்டாம்:

பெரும்பாலான வீடுகளில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு முதற்காரணமே வாக்குவாதம். அது ஆரோக்கியமாக இருக்கும் வரையில் பிரச்னையில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் பழைய கதைகளை இழுத்து போட்டு, ‘நீங்கள் அன்னைக்கு அப்படி பேசுனீர்கள், அன்னைக்கு அப்படி நடந்து கொண்டீர்கள்’ என்று வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. முடிந்தவரையில் ஒருவருக்கொருவர் அணுசரித்து செல்ல வேண்டும்.

Categories

Tech |