#sterlite தற்காலிகமானது என்றும், திமுக ஆட்சியில் திறக்கப்படாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். தற்கால மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவே தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்த சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.