ஸ்டெர்லைட் ஆலையை திக்க அனுமதிக்கவே கூடாது என தமிழக அரசு அதிரடி வாத்தை முன்வைத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞ ஆஜராகி நிர்வாகம் திறக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ? அல்லது இந்த ஆலையில் என்ன மாதிரியான விஷயங்களில் சரியான கடைபிடிக்கப்பிடித்தால் இயக்கப்பட்டலாம் ? எது போன்ற விஷயங்களை நாங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தால் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறியிருந்தார்கள்.
மேலும், ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் மீண்டும் கேட்பது பராமரிப்பு பணிகளுக்காக இடைக்கால திறக்கவேண்டும். சில முக்கிய முக்கியமான விஷயங்களை மட்டும் நாங்கள் அந்த ஆலையில் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் ஆலையில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பொருட்கள் வீணாகிவிடும். அதை பயன்படுத்த முடியாத நிலை ஆகிவிடும். ஒருவேளை மீண்டும் இந்த ஆலை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டால் கூட நாங்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது எனவே இடை காலமாக அந்த ஆலையை நாங்கள் திறந்து சரிசெய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசு மிக தெளிவாக சொல்லி இருக்கிறது. எந்த ஒரு காரணத்திற்காகவும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தமிழக அரசின் சார்பில் எங்களுடைய அதிகாரிகளை கொண்டு அந்த ஆலையை சரியான முறையில் இருக்கிறதா ? என்பதை தொடர்ந்து நாங்கள் கவனித்து வருகிறோம் என்பதை கூறி வருகின்றார்கள். எனவே இடை காலமாக திறக்கலாமா வேண்டாமா என்பது தான் பிரதான பிரச்சனையாக இருந்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு அதையும் செய்யக்கூடாது என திட்டவட்டமாக கூறி இருப்பதால் ஆலையை திக்க முடியாத சூழல் இருக்கிறது.இந்த வழக்கு விசாரணை என்பது இன்னும் சில மாதங்களோ சில வருடங்களோ கூட சொல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்.
— AIADMK (@AIADMKOfficial) November 16, 2020