வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்தில் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். எனவே பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பொதுமக்கள் சிலர் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறை தலைமையிலான ஊழியர்கள் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். இதில் முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்துகளில் அனுமதி இல்லை என்றும், அதிக அளவு பயணிகளை பேருந்துகளில் ஏற்றி செல்ல வேண்டாம் என்றும்,பேருந்து கண்டக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.