Categories
உலக செய்திகள்

புதிதாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….. கடுப்பான பொதுமக்கள்…. தலை நகரில் நடைபெறும் போராட்டம்….!!

நெதர்லாந்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி நெதர்லாந்து அரசாங்கமும் செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது பொது இடங்களில் 75 நபர்களுக்கும் மேல் கூடினால் கட்டாயமாக கொரோனா குறித்த சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு விதிக்கப்பட்ட கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நெதர்லாந்தின் தலைநகரில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

Categories

Tech |