தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் நிஷாந்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தர்மத்துப்பட்டியை சேர்ந்த சவுந்தர்யா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நிஷாந்துராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணவன் மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு விஷ்வந்த்ராஜ் என்ற 1 1/2 வயது ஆண் குழந்தை உள்ளது.
இதனைத்தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி மீண்டும் சண்டை வந்த நிலையில் ஆத்திரமடைந்து சவுந்தர்யா தர்மத்துப்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் இவர்களுக்கு இடையே உள்ள சண்டை முடிவடையாத நிலையில் மிகவும் மனமுடைந்த சவுந்தர்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யாவின் உடலை மீட்டு உடற்கூறைவிற்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் திருமணமாகி 3 வருடத்தில் பெண் தேர்க்கொலை செய்துகொண்டுள்ளதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.