செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், தீபாவளி – பொங்கல் – கிறிஸ்மஸ் – ரம்ஜான் இது எல்லாத்தையும் விட, திரைப்பட விழா தான் எனக்கான ஃபெஸ்டிவல். என்னுடைய ஆரம்பமே இங்கிருந்து ஆரம்பிச்சது. இந்த மாதிரியான உலக படங்களை… திருட்டுத்தனமா டிக்கெட் வாங்காம, காசு இல்லாம, உள்ள போயி, கெஞ்சு கூத்தாடி அப்படி போய் படம் பார்த்தது. அப்படி படம் பார்த்து எனக்கு ஆசை சினிமாவுக்கு வரணும் என்கிறது.
சினிமாவுக்கு வந்தது அப்புறம் என்னுடைய ஆசை… என்னுடைய படம் தேசிய விருது வாங்கணும் என்கிறது… இதுவரைக்கும் மூணு தேசிய விருது வாங்கிட்டேன், நம்மளுடைய ஆசை அடங்கல. நம்முடைய இரவின் நிழல் படத்திற்கு இதுவரை 114 இன்டர்நேஷனல் அவார்ட்ஸ் கிடைச்சிருக்கு. ஆனால் எல்லாத்தையும் விட ரொம்ப சந்தோஷம்..
நம்முடைய தாய் வீட்டில், நம்முடைய தாய் நாட்டுல நமக்கு என்ன மரியாதை கிடைக்குது ? முதல் சந்தோஷம் இந்த 12 படங்களில் என்னுடைய இரவின் நிழல் படம் திரையிடுவது, ரொம்ப பெருமையான விஷயம். இப்பவே எனக்கு விருது கிடைச்சது மாதிரியான ஒரு விஷயம். எத்தனை விருது கிடைக்கப்போகிறது என்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இந்த விருதோட சந்தோஷம் என்னங்கறது இப்ப நான் சொல்லும் பொழுது என்னுடைய முகத்தில் தெரியும். சந்தோஷம்ங்குறது வார்த்தையில கிடையாது. அது உள்ள இருந்து வருதது என பெருமையுடன் பேசினார்.