அஜித் ஏகே 62 திரைப்படத்திற்கு பிறகு 12 மாதங்கள் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்தது. தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாக இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். இந்த நிலையில் தற்போது அஜித் குறித்து பரவும் தகவல் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது. அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே62 திரைப்படத்தை முடித்துவிட்டு 18 மாதங்கள் பல நாடுகளுக்கு பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அந்த 18 மாதங்கள் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள மாட்டார் எனவும் செய்தியை வெளியாகியிருக்கின்றது. இதைக் கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றார்கள். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை குறிப்பிடப்பட்டது.