Categories
சினிமா தமிழ் சினிமா

‘பருத்திவீரன்’ பற்றி இன்னும் பேசுகிறார்கள்…. கார்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு….!!

பருத்திவீரன் பற்றி மக்கள் இன்னும் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது என கார்த்தி பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ”விருமன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி அறிமுகமாகிறார்.

கிராமத்து பின்னணியில் அமைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி சுற்றுவட்டார பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”பருத்திவீரன் படத்தை பற்றி இங்குள்ள மக்கள் இன்னும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்திருக்கிறார். மேலும், ”அவர்களின் அன்பும் அரவணைப்பும் இன்றும் மாறாமல் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CVczJ6BMogz/

Categories

Tech |