கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் ஆதரவற்ற முதியவர் (சுமார் 70 வயது) ஒருவர் பிச்சை எடுத்துவந்தார். இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் கிராம நிர்வாக அலுவலர், அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் லிங்கேஸ், தனது சொந்த செலவில் பேரூராட்சி ஊழியர்களுடன் இணைந்து முதியவர் உடலை நல்லடக்கம் செய்தார். மனிதர்களிடையே மனிதநேயம் குறைந்துவரும் இக்காலகட்டத்தில், மனிதநேயத்துடன் செயல்பட்ட தலைமைக் காவலர் லிங்கேஷின் செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.