கச்சா எண்ணெய் விலை உயர்வு , பொருளாதார மந்த நிலை நீடித்தால் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் , தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகியவற்றின் புள்ளி இன்று பெரும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36, 481 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 176 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 10,826 புள்ளிகளுடன் இன்றைய வணிகம் நிறைவடைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு , உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.