இலங்கையில் இரு வாரங்கள் கழித்து திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13% சரிவடைந்ததால் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இரண்டு வாரங்கள் கழித்து கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் தொடங்கப்பட்ட சில நொடிகளிலேயே உள்ளூர் Standard & Poor குறியீடானது 7% சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்பு, மீண்டும் 13% சரிவடைந்தது. எனவே, பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரியிலிருந்து பங்குகளுக்கான மதிப்பு 40% வரை குறைந்திருக்கிறது. மற்றொரு புறம், உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை அதிகரித்திருக்கும் நிலையில் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, இலங்கை மக்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.