மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் அதிகரித்து 40,331.11 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியைப் பொறுத்தமட்டில் 11.55 புள்ளிகள் உயர்ந்து 11,886.65 ஆக வர்த்தகம் ஆனது.இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஜூல், கிராஸிம் உள்ளிட்ட பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்து காணப்பட்டது.
அந்த பங்குகள் முறையே 9.54, 8.76, 3.37 மற்றும் 3.11 என உயர்ந்திருந்தது. ஐஓசி, ஹீரோ மோட்டார்கார்ப் உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையைப் பொறுத்தமட்டில் சோலா ஃபைனான்ஸ், கார்ப்பேங்க் மற்றும் இன்ஃப்ரா டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.