தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் ஆறு சிலைகள் காணாமல் போனது. இதில் கிருஷ்ணர் சிலை மட்டும் தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.