Categories
உலக செய்திகள்

17 வயது சிறுமிக்கு வயிற்று வலி…. ஸ்கேன் செய்த போது…. மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

யுனைடெட் கிங்டமில் பெண் ஒருவர் தனது முடியை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவர் வயிற்றில் அந்த முடி பந்து போன்று உருவாகியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

17 வயது பெண் ஒருவர் வயிற்றில் இருந்து 48 சென்டி மீட்டர் நீளமுள்ள முடி பந்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தனது சொந்த முடியை பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு பந்து போல் உருவாகியுள்ளது. டாக்டர்கள் அந்த பெண்ணிற்கு ட்ரைக்கோபாகியா என்ற நோய் இருப்பதாக கண்டறிந்தனர். முடிகளை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் அரியவகை நோய். தலை முடியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதே இந்த நோய். பெண்கள் அதிக அளவில் இந்த நோயால் பாதிப்படைகின்றனர்.

அந்த பெண் இரண்டு முறை மயக்கம் அடைந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நீர்வீழ்ச்சியில் குளித்தபோது அவருக்கு  உச்சந்தலையில் அடிபட்டு விட்டது. அவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர் வயிற்றில் வீக்கம் இருந்ததை மருத்துவர்கள் கவனித்தனர். அதை எடுத்து அந்த பெண்ணிடம் இது குறித்து கேட்டனர். அதற்கு அந்த பெண் தனது கடந்த 5 மாதங்களாக தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறினார். கடந்த இரண்டு வாரங்களில் வயிற்றுவலி மோசமடைந்தது எனக் கூறினார்.

பிறகு ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது வயிற்றுப் பகுதியில் ஏதோ பால் போன்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்தப் பெண் ட்ரைக்கோபாகியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது. இந்த நோய் உள்ள மக்கள் தங்களது தலை முடியை பிடுங்கி தானாக சாப்பிட்டு கொள்வார்கள். அந்த பெண் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிறகு அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து முடி பந்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியேற்றினர்.

Categories

Tech |