குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் பகுதியில் இருந்து சூரத் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் தலைவர் சபீர் கப்லிவாலா, வாரீஸ் பதான் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓவைசி அமர்ந்திருந்த பெட்டியில் சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் கண்ணன் கண்ணாடி ஒன்று சேதமடைந்துள்ளது.
இந்த தகவலை வாரிஸ் பதான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூறியுள்ளார். அதன் பிறகு கல்வீசு தாக்குதல் நடத்தினாலும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினாலும் எங்களுடைய கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர் சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.