Categories
பல்சுவை

“STONEHENGE” ஏலியன்களால் கட்டப்பட்டதா?…. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் மர்மங்கள்…!!!

உலகில் ஆச்சரியமூட்டும் இடமாக இருக்கும் Stonehenge குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வில்ட்ஷயர் என்ற இடத்தில் Stonehenge உள்ளது. இந்த இடம் தற்போது பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்த Stonehenge சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு சுடுகாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு பாறைகளும் 12 அடி உயரமும், 25 டன் முதல் 500 டன் வரை எடையும்  கொண்டுள்ளது. இவ்வளவு கனமான பாறைகளைக் கொண்டு எதற்காக Stonehenge கட்டப்பட்டது என்பது  புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த கட்டிடம் யாரால் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. இந்த Stonehenge இருக்கும் இடத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரிசானி மலைத் தொடரில் இருந்து கட்டுவதற்கான பாறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வளவு தூரத்தில் இருந்து கனமான பாறைகளை எப்படிக் கொண்டு வந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஏனெனில் எந்த ஒரு உயிரினத்தாலும்,  உலகில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் இவ்வளவு எடையுள்ள கல்லை தூக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த Stonehenge-ல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் மைக்கேல் என்பவர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது சில எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூடுகள் மக்களால் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் Stonehenge ஏலியன்களால் கட்டப்பட்டுள்ளது என மக்கள் நம்புகின்றனர். இதனையடுத்து பழங்காலத்தில் மிகப் பெரிய மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் தான் Stonehenge கட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது. இது மக்களின் மூட நம்பிக்கை என்றாலும்,  stonehenge என்பது மர்மங்கள் நிறைந்த இடமாகவே இருக்கிறது.

Categories

Tech |