Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அப்படி அதுல என்னதான் இருக்கு…? காவல்துறையினர் மீது கல்வீச்சு… வேலூரில் பரபரப்பு…!!

லாரியை விரட்டிச் சென்ற காவல் துறையினரின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட காவல்துறையினர் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவசூல் பகுதியில் மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் லாரி எடுத்து வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மினி லாரியை துரத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து வேலூர் முக்கிய சாலைகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகனத்தை நிறுத்திள்ளனர். ஆனால் மினிலாரியானது நிற்காமல் வேகமாக காட்பாடி நோக்கி சென்றுள்ளது.

இதனை அடுத்து சித்தூர் பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து இருந்தனர். ஆனால் மினிலாரியானது தடுப்பில் மோதி அதிவேகமாக காவலர் வாகனத்தின் மீது மோதி சென்றுள்ளது. இதில் காவல்துறையினர் வாகனத்தின் பின்புறம் சேதமடைந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளனர். அப்போது லாரியில் பின்னால் இருந்தவர்கள் திடீரென கற்களை காவல்துறையினர் வாகனத்தின் மீது வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியின் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |