Categories
அரசியல்

STOP பண்ணிக்கோங்க…! திரும்ப திரும்ப சொல்லாதீங்க…. நாங்க பதிலடி கொடுப்போம் ….!!

சென்னையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அபோது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக அரசு நிறைவேற்றவில்லை என  தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி பரப்பி வருகின்றார். திமுக சொன்ன 505 வாக்குறுதிகளில் 4 மாதத்தில் 202 வாக்குறுதிகளை  திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில்  அதிமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன ?

தன்னுடைய தவறை மறைப்பதற்காக திமுக அரசு மீது தவறான தகவல்களை பரப்புகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி அரசின் மீது அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவதூறுகளை தொடர்ச்சியாக பேசுவது என்பது அவரை அவரே தாழ்த்திக் கொள்வதாகும்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவோடு திமுக மகத்தான வெற்றி பெறும். காரண காரியங்களோடு, மிகுந்த புள்ளி விவரங்களோடு மாண்புமிகு முதலமைச்சர் சொன்னதற்குப் பிறகும் மீண்டும் மீண்டும் அவர் சொல்வது என்பது தமிழ்நாட்டு மக்களை ஏமாளிகளாக ஆக்குவதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுகின்றார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அவர் தொடர்ந்து அவதூறு பரப்புவார் ஆனால் தக்க பதிலடிகள் அவ்வப்போது தரப்படும் என தங்கம் தென்னரசு கூறினார்.

Categories

Tech |