Categories
தேசிய செய்திகள்

“பாரத் ஜோடாவை நிறுத்துங்க”…. ராகுல் காந்தியை விளாசிய மத்திய மந்திரி…. அனல் பறக்கும் அரசியல் களம்….!!!!

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றானது சீனாவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்திக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு மாஸ்க், சானிடைசர் போன்ற அனைத்து கொரோனா விதிமுறைகளை  நடை பயணத்தில் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஒருவேளை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் நாட்டின் நலன் கருதி உடனடியாக பாரத் ஜோடாவை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாரத் ஜோடாவில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தியை பற்றிய செய்திகள் தான் நாள்தோறும் சமூக ‌ வலை தளங்களில் அதிக அளவில் பேசப்படுவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் பாஜக இப்படி எல்லாம் செய்வதாக கடுமையாக சாடியுள்ளது. அதோடு கர்நாடக மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக மேற்கொண்டிருக்கும் பாதையாத்திரைக்கு இதே போன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ராகுல் காந்தியின் குடும்பத்தை கடுமையாக சாடியுள்ளார். ஒரு குடும்பம் நாட்டில் உள்ள சட்டங்களுக்கு மேலாக தங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் கோவிட் பரவலை தடுக்கும் என்னுடைய கடமையை நான் புறக்கணிக்க முடியாது. நடை பயணத்தில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் இமாச்சல் பிரதேச முதல்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது தான். மேலும் நீங்கள் எந்த குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |