தேனி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து கர்நாடக அரசு மேகதாதுவில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.