Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிறுத்துங்க…!”தாலி கட்டாதீங்க” என் காதலன் வருவான்…. நம்பிய பெண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா ?

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண்ணின் காதலன் வராததால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரியிலுள்ள மட்டக்கண்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த்-பிரியதர்ஷினி இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து திருமணத்தன்று மணப்பெண் கூறுகையில், ”  கொஞ்சம் பொறுங்கள், இப்போது என்னை திருமணம் செய்ய என் காதலன் வருவான். எனக்காக அவரது திருமண உறவை முறித்த அவரின் குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களை திருமணம் செய்து கொண்டு அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறினார். மணமேடையில் மணப்பெண் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு திருமணமும் நின்று போனது.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதன்பின்னர் திருமணம் நடந்ததா? அவருடைய காதலன் வந்தாரா? என்பது குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்த நிலையில் காதலனுக்காக காத்திருந்த பிரியதர்ஷினிக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து மணமகளின் பெற்றோர் அவரை காரில் ஏற்றிக்கொண்டு  சென்று சாலையில் இறக்கிவிட்டு சென்றனர். இந்நிலையில் அப்பெண் தனது காதலனை தேடி சென்னை சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பெண்ணின் பெற்றோர் அவமானத்தால் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். பிரியதர்சினியின் காதலன் ஏற்கனவே திருமணமாகி பிரிந்தவர் என்பதால் ,முறைப்படி விவாகரத்து வாங்கினால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்பதால் அவர் தனது காதலனுக்காக காத்திருந்தும் கடைசி வரை நடக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

https://twitter.com/i/status/1322456001677729792

 

Categories

Tech |