கொரோனா வைரஸ் தொற்றை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அரசின் சில நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். மேலும் “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதி மக்களுக்கும் தனது கட்சி நிர்வாகிகள் உதவியோடு நிவாரணங்களை வழங்கி வருவதையும் நம்மால் ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
இருப்பினும், அவர் வெளியிடும் அறிக்கை தொடர்பாக ஆளும்கட்சி தரப்புக்கு குடைச்சலைகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நிலையில், இது தொடர்பாக பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்டாலின் கொரோனா தொற்றை வைத்து அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.