பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனின் வரும் இலையுதிர் காலத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி பிரிட்டனில் முன்னுரிமை குழுக்களுக்கு இரண்டாவது டோஸும் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பல நாடுகளில் இன்னும் தங்களது திட்டத்தை தொடங்க முடியாமல் திணறி வரும் நேரத்தில் பிரிட்டன் இரண்டாவது தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தியவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு நாடும் முதல் 9 முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போட்டவுடன் தடுப்பூசி போடும் பணியிணை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இது மற்ற நாடுகளுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.