Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாடகை பணம் கேட்டது குத்தமா…? வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாடகை பணம் கேட்டதால் கடை உரிமையாளரை வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டின் முன்பகுதியில் கடைகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மஞ்சுநாதன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக கடையின் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் நாகராஜ் தனது உறவினர்களுடன் சென்று வாடகை கேட்ட போது மஞ்சுநாத் தனது நண்பர்களுடன் இணைந்து நாகராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |