வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 248 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 78 பேர் குணமடைந்துள்ள நிலையில், 167 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.