Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வீசிய சூறாவளி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர்…. சீர்குலைந்த கப்பல்கள்….!!

துருக்கியிலுள்ள இஸ்தான்புல் மார்மரா என்னும் கடல்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் அங்கிருந்த சரக்கு கப்பல்கள் சீர் குழைந்துள்ளது.

துருக்கியில் 60 நிமிடத்திற்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது. அந்த சூறாவளி காற்றால் மிகப் பெரிய இரும்புத் தகடு ஒன்று அருகிலிருந்த முதியவர் தலையில் விழ சென்றுள்ளது.

ஆனால் அந்த முதியவர் தன்னுடைய தலையில் விழ விருந்த இரும்புத் தகட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதேபோல் இஸ்தான்புல் மார்மரா கடல் பகுதியிலும் சூறாவளி காற்று வீசியுள்ளது.

அவ்வாறு வீசிய சூறாவளி காற்றினால் கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல்கள் சீர் குழைந்துள்ளது.

Categories

Tech |