Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் முடிவுக்கு வந்த மழை.. வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கனத்த மழை ஒருவழியாக முடிவடைந்த நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் கடந்த வரம் முழுக்க பலத்த மழையால் கடும் புயல் ஏற்பட்டது. இதனால் பல சேதங்களும் ஏற்பட்டது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் அச்சம் ஏற்பட்டது. ஒரு வழியாக தற்போது தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் பெரிய புயல் உருவாகும் என்று எச்சரித்திருக்கிறது.

எனினும் எந்த பகுதிகளில் ஆபத்து என்று உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. வரும் சனிக்கிழமையிலிருந்து, புதன்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த வாரத்தில் ஏற்பட்டது போன்று, பெரும் ஆபத்து இந்த வாரத்தில் இருக்காது என்று கருதப்படுகிறது.

Categories

Tech |