அமெரிக்காவில் கடும் வெள்ளத்தில் மாட்டி போராடிய 2 நபர்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டரில் வந்து காப்பாற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று கடும் புயல் உருவாகி பல பகுதிகளை சேதப்படுத்தியது. பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் அரிசோனாவில் கடும் வெள்ளத்தில் ஒரு ட்ரக் மாட்டிக்கொண்டது.
Video shows the rescue of two men stranded on the top of a truck that became stuck in dangerous flash floods that inundated parts of Arizona. https://t.co/VxMmp2r9wn pic.twitter.com/qo9PheAnfn
— ABC News (@ABC) July 27, 2021
அதிலிருந்த இரு நபர்கள் எப்படியோ ட்ரக் மீது ஏறி அமர்ந்துகொண்டு அதிவேகமாக வீசும் புயலில் மாட்டி தவித்து வந்தனர். அப்போது கடவுள் போல ஹெலிகாப்டரில் மீட்பு படையினர் வந்து ட்ரக்கின் மீது அமர்ந்திருந்த இரண்டு நபர்களையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.